காலைத் தியானம் – ஜனவரி 16, 2022

மத் 9: 9 – 17

பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் . . .    

                                    பரிசேயர்கள் தங்களைப் பரிசுத்தவான்கள் என்று காட்டிக் கொள்வதில் அக்கறையாயிருந்தார்களே தவிர, பிறருக்கு உதவ எந்தவித விருப்பமும் இல்லாமல் இருந்தார்கள். பிறரைக் குறை சொல்லுவதில் அவர்களுக்கு இருந்த திருப்தி அதிகம். அவர்கள் ஒருவரையும் உற்சாகப் படுத்தியதாகத் தெரியவில்லை. தங்களைப் போன்ற “பரிசுத்தவான்கள்” கூட்டத்தில் வேறே யாரையும் சேர்க்காமல் சொகுசாக இருந்தார்கள். இன்று நம்முடைய நிலையும் அதுதானோ? நம்முடைய கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் ‘பாவிகள்’ யாரையும் பற்றி கவலைப் படாமல் சொகுசாக வாழ்க்கிறோமோ? பாவத்தில் மூழ்கியிருக்கும் ஒரு சகோதரனிடத்தில் அல்லது சகோதரியினிடத்தில் இரட்சிப்பைக் குறித்து பேசியதுண்டா? உன் திருச்சபை பாவிகளை வரவேற்கும் ஒரு இடமாக இருகிறதா?

ஜெபம்:

ஆண்டவரே, பாவத்தில் சிக்கித் தவிக்கிறவர்களுக்கு உம்மை அறிமுகப்படுத்தும் வாஞ்சையை எனக்குத் தாரும். ஆமென்.