காலைத் தியானம் – ஜனவரி 17, 2022

மத் 9: 18 – 26

அவருடைய வஸ்திரத்தின் ஒரத்தைத் தொட்டாள்   

                                   பெரும்பாடுள்ள அந்த பெண், 12 ஆண்டுகள் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதியால் கஷ்டப்பட்டு வந்தாள். மாற்கு 5:25-34 வரையுள்ள வேதபகுதியிலும் இந்த பெண்ணைக் குறித்த சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது. அவளுடைய உதிரம் (இரத்தம்) ஊறிக் கொண்டேயிருந்தது என்று வாசிக்கிறோம். லேவியராகமம் 16:25-27இன் படி அவள் தீட்டுப்பட்டவள் அல்லது அசுத்தமானவள். அவளை ஒருவன் தொட்டுவிட்டால் அவனும் அசுத்தமானவனாகி விடுவான். ஆகையால்தான் அந்த பெண், இயேசுவைத் தொட விரும்பாமல் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். இயேசுவை அணுகுவதற்கு இதுதான் முறை என்று ஒரு இலக்கணம் கிடையாது. அவர் உன் இருதயத்தைப் பார்க்கிறவர். உன் விசுவாசத்தைக் கவனிக்கிறவர். நீ இயேசுவைத் தொழுதுகொள்ளுகிற முறையில் மற்றொருவன் தொழுதுகொள்ளவில்லை என்பதால் அவனை ஒதுக்கித் தள்ளாதே.

ஜெபம்:

ஆண்டவரே, என் விசுவாசத்தை மாத்திரம் பார்த்து எனக்கு நன்மை செய்கிறதற்காக நன்றி சுவாமி. ஆமென்.