காலைத் தியானம் – ஜனவரி 19, 2022

மத் 10: 1 – 15

புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும்

                                   உலக மக்கள் அனைவருக்கும் இரட்சகராகத்தானே இயேசு பூமிக்கு வந்தார். பின் ஏன் யூதர்கள், புறஜாதியார், சமாரியர் என்று பிரித்து பேசுகிறார்? யூதரல்லாதவர் புறஜாதியார் என்று அழைக்கப்பட்டார்கள். யூதர்களின் ஒரு பகுதியினர் புற ஜாதியாரோடு கலந்ததால் உருவான ஒரு மக்கள் குழுதான் சமாரியர் என்று அழைக்கப்பட்டனர். யூதர்களுக்கும் சமாரியருக்கும் அந்த காலத்தில் எல்லா காரியங்களிலும் சண்டைதான். இயேசு தம் சீஷர்களை முதலிலேயே யூதர்கள், சமாரியர், புறஜாதியார் என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லாரிடமும் அனுப்பியிருந்தால் அது நல்ல முன்மாதிரியாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? ஆண்டவருக்கு உலக மக்கள் அனைவரும் ஒன்றுதான். ஆனால் முதலில் யூதர்கள் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்பதும் பின்பு அவர்கள் போய் உலக மக்கள் அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்பதும் ஆண்டவருடைய திட்டம். அறுப்பின் எஜமானுடைய திட்டம். அவருடைய திட்டத்தின்படி செயல்பட நாமும் நம்மை அர்ப்பணிப்போமாக.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய திட்டங்கள் என்னுடைய அறிவுக்கு எட்டாதவை. நீர் சொல்வதை மாத்திரம் செய்ய எனக்குக் கீழ்ப்படிதலைத் தாரும்.  ஆமென்.