காலைத் தியானம் – ஜனவரி 20, 2022

மத் 10: 16 – 31

மறு பட்டணத்திற்கு ஓடிப் போங்கள்

                                   28ம் வசனத்தில் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம் என்று இயேசு சொல்லுகிறார். ஆனால் 23ம் வசனத்தில், ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறுபட்டணத்திற்கு ஓடிப் போங்கள் என்றும் சொல்லுகிறார். இது ஒன்றுக்கொன்று முரண்பட்ட போதனையாகத் தெரிகிறதல்லவா? நாம் ஆண்டவரைத் தவிர வேறே யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது உண்மைதான். அதற்காக நாம் நமக்கு விரோதமாக வரும் எல்லா சக்திகளுடனும் போர் புரிய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் செய்துமுடிக்க வேண்டிய பணி உண்டு. அந்த பணியை நாம் செய்து முடிக்குமுன் நம்முடைய சரீரம் மரிப்பது ஆண்டவருடைய சித்தம் அல்ல. ஆகவே அவர் சிலசமயங்களில், எதிர்க்கும் சக்திகளுடன் போர் செய்வதைவிட அந்த இடத்திலிருந்து ஓடிப்போய்விடுவது மேலானது என்று சொல்லுகிறார். இயேசுவின் சீஷர்கள் அவர்களுக்கென்று குறிக்கப்பட்டிருந்த காலத்திற்கு முன்னதாக இரத்தச் சாட்சிகளாக மரிப்பது அவருடைய சித்தமல்ல.

ஜெபம்:

ஆண்டவரே, நான் தைரியத்தோடும் ஞானத்தோடும் உமது சித்தத்தை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.