காலைத் தியானம் – ஜனவரி 23, 2022

மத் 11: 20 – 30

என் நுகம் மெதுவாயும், என் கனம் இலகுவாயும் இருக்கிறது

                                  சுமைகளை இழுத்துக்கொண்டு போகும்படி மாடுகளின் முதுகுகளில் வைக்கப்படும் மரக்கட்டைதான் நுகம். மாடுகள் சுமக்கும் சாமான்களின் எடைக்கேற்றபடி நுகத்தின் அழுத்தம் அதிகரிக்கும், அல்லது எளிதாக இருக்கும். நம்முடைய பாவங்கள் நாம் சுமக்கும் சுமை. நாம் பாவத்தில் மூழ்கியிருக்கும்போது பாவத்தின் சுமை நம்மை அசையவிடாமல் அழுத்திவிடுகிறது. அந்த சுமையை இறக்கி வைக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டால் சாத்தானின் நுகத்தை எடுத்து எறிந்துவிட்டு, இயேசு கிறிஸ்துவின் நுகத்தை எடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போதும் ஒரு சுமை உண்டு. அதுதான் இயேசு கிறிஸ்துவின் சீஷராயிருக்கிற நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய சிறிய தியாகங்கள். பாவ சுமையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்து நமக்கு அனுமதிக்கும் சுமை மிகவும் இலகுவானது.

ஜெபம்:

ஆண்டவரே, என் பாவ பாரத்தை இறக்கி வைத்ததற்காக நன்றி. உமது நுகத்தை மகிழ்ச்சியோடு சுமப்பேன். ஆமென்.