காலைத் தியானம் – ஜனவரி 25, 2022

மத் 12: 9 – 21

வாக்குவாதம் செய்யவுமாட்டார்

                                  காய்கறி விலை, விளையாட்டு, அரசியல், பொருளாதாரம், ஆராதனை முறைகள், அனுதின வாழ்க்கை சம்பந்தப்பட்ட காரியங்கள் – இப்படி எல்லாவற்றிலும் நமக்கென்று ஒரு கருத்து உண்டு. அந்த கருத்துதான் சரியானது என்றும் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறோம். வாக்குவாதத்தால் அதை சாதித்துவிடலாம் என்றும் நம்புகிறோம். அது முற்றிலும் தவறான நம்பிக்கை. ஒரு கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக ஒரு காரியத்தைக் குறித்து அரை மணி நேரம் வாக்குவாதம் பண்ணிக்கொண்டே இருந்தார்கள். வாக்குவாதம் முடிவதாகத் தெரியவில்லை. பொறுமையை இழந்த பத்து வயது மகள், அப்பா உங்கள் கருத்துதான் என்ன என்று கேட்டாள். தன் நிலையை விளக்கிய தகப்பனிடம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே என்று சொன்னாள். அடுத்ததாக அம்மாவிடம் அதே கேள்வியைக் கேட்டவுடன் அவளும் தன் நிலையை விளக்கினாள். நீங்கள் சொல்வதும் முற்றிலும் சரியே என்று அம்மாவைப் பார்த்து சொன்னாள் அந்த சிறுமி. பின்பு இரண்டு பேரையும் பார்த்து “இப்போது இரண்டு பேரும் சற்று நேரம் பேசாமலிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். சிறுமிக்கு இருந்த ஞானம் பெற்றோர்களுக்கு இல்லை. இதுவரை யாரும் வாக்குவாதத்தில் வெற்றி பெற்றதாக சரித்திரமே கிடையாது.

ஜெபம்:

ஆண்டவரே, நான் எப்படி பிறரிடம் குற்றம் கண்டுபிடிக்கஆண்டவரே, வாக்குவாதத்தினால் மற்றவர்களைப் புண்படுத்தாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.