மத் 12: 22 – 32
தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் நிலைநிற்க மாட்டாது
உன் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கிறதா? ஒருவேளை வெளி உலகிற்கு உன் குடும்பம் ஒரு பிரச்சனையற்ற குடும்பமாகத் தோன்றலாம். முன்மாதிரியானக் குடும்பமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மையான நிலை உனக்குத் தெரியும். ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தும், ஒருவருக்கொருவர் பேசாமல் வாழ்க்கிறவர்கள் எத்தனை பேர்? கணவன். மனைவிக்குள் சண்டை. பெற்றோர் பிள்ளைகளுக்குள் சண்டை. உன் குடும்பத்தில் இப்படிப்பட்ட நிலை இருந்தால், ஆண்டவர் முன்னிலையில் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கொண்டு வாருங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுங்கள். ஒருவரையொருவர் மன்னியுங்கள்.
ஜெபம்:
ஆண்டவரே, விட்டுக் கொடுக்கும் மன நிலையையும் மன்னிக்கும் பெருந்தன்மையையும் எனக்குத் தாரும். ஆமென்.