மத் 12: 33 – 42
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்
ஒருவனுடைய இருதயம் சுத்தமாக இருந்தால், அவனுடைய வார்த்தைகள் அல்லது பேச்சு இனிமையாக இருக்கும். மற்றவர்களை உற்சாகப்படுத்தும். புண்படுத்தாத வார்த்தைகளை மட்டுமே அவன் பேசுவான். இருதயத்தில் சுத்தமில்லையென்றால் பேச்சிலும் சுத்தம் இருக்காது. பரிசேயர்களின் மனது சுத்தமாக இல்லை. ஆனால் பரிசுத்தவான்கள் போல நடித்தார்கள். அவர்களுடைய பேச்சு அவர்கள் இருதயத்தின் உண்மையான நிலையை வெளிப்படுத்திவிட்டது. அது மாத்திரமல்ல, வீணான வார்த்தைகளை, அதாவது பிறரைக் கெடுக்கும் எண்ணத்தோடு பேசப்படும் வார்த்தைகளைப் பேசும் ஒவ்வொருவனும் நியாயத்தீர்ப்பு நாளில் ஆண்டவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். என் வார்த்தைகள் எப்படிப்பட்டவை? வீணான வார்த்தைகள் உன் வாயிலிருந்து வருகின்றனவென்றால், உன் இருதயத்தை சுத்தப்படுத்து.
ஜெபம்:
ஆண்டவரே, வீணான வார்த்தைகளைப் பேசாதபடி என் இருதயத்தை சுத்தப்படுத்தும். ஆமென்.