காலைத் தியானம் – ஜனவரி 29, 2022

மத் 13: 1 – 23

நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான்

                                  நான்கு வகையான மக்களைக் குறித்து இன்று வாசித்த பகுதியில் பார்க்கிறோம். முதலாவது வகை, நற்செய்தியைக் கேட்டும் மனந்திரும்பாதவர்கள். இயேசுவுக்கு இருதயத்தில் இடம் கொடுக்காதவர்கள். இரண்டாவது வகை, மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்ட போதிலும், ஆவியில் வளர்ச்சி அடைவதற்கான பயிற்சிகள் (வேத வாசிப்பு, ஜெபம், ஆலயத்தில் ஆண்டவரைத் தொழுது கொள்வது போன்றவைகள்) எதுவும் மேற்கொள்ளாதவர்கள். இவர்கள்தான் கற்பாறையின் மேல் விழுந்த விதைகள். மூன்றாவது வகை மக்கள், ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து வந்தாலும் பணம், பதவி, சொத்து போன்றவைகளின் மீதுள்ள இவ்வுலக ஆசை, வளர்ச்சியை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. நான்காவது வகை மக்கள்தான் தாங்களும் ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்றாக வளர்ந்து பிறருக்கும் கனி கொடுக்கிறவர்களாய் வாழ்கிறவர்கள். நம்மில் அநேகர் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள். We are satisfied with our stunted growth. கனி தரும் மனிதனாக நான்காவது வகையைச் சேர்ந்த மனிதனாக மாற, ஆண்டவருடைய உதவியைத் தேடு.

ஜெபம்:

ஆண்டவரே, நல்ல கனி தரும் மனிதனாக வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.