காலைத் தியானம் – பிப்ரவரி 01, 2022

மத் 14: 1 – 14

அதைக் கேட்டு . . . தனியே போனார்

                                 யோவான் இயேசு கிறிஸ்துவின் முன்னோடி. யோவானின் ஊழியம் இயேசு கிறிஸ்துவின் பூலோக வாழ்க்கையோடு பிணைக்கப்பட்ட ஊழியம். யோவான் அநியாயமாய்க் கொலை செய்யப்பட்டது இயேசுவின் மனதை மிகவும் பாதித்திருக்கும். அந்நேரத்தில் அவர் தனிமையில் இருக்க விரும்பினார். மக்களோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவர்களுக்குத் தங்களுடைய தேவைகளைக் குறித்த கவலை. இயேசு அவர்களிடம் நான் துக்கத்திலிருக்கிறேன்; ஆகையால் ஒரு சில நாட்கள் என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் என்று சொல்லவில்லை. மக்கள்மேல் மனதுருகி உடனேயே அவர்களிடத்தில் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கிவிட்டார். துக்கம் தரக்கூடிய சம்பவங்கள் உன்னுடைய வாழ்க்கையில் நடந்தாலும், உன்னையும் உன் துக்கத்தையும் மாத்திரமே நினைத்துக்கொண்டு இருந்துவிடாதே. உன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் படும் பாடுகளைப் பார். அவர்களுக்கு உதவி செய்யத் தாமதிக்காதே.

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய துக்கம் என்னை செயலிழக்கச் செய்யாமல் பார்த்துக் கொள்ளும். ஆமென்.