காலைத் தியானம் – பிப்ரவரி 02, 2022

மத் 14: 15 – 21

நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்

                                 இங்கு இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு ஒரு முக்கியமான பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.எவ்வளவு நாட்கள் தான் பிரச்சனைகளைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பீர்கள்? செயல்பட ஆரம்பியுங்கள். பிரச்சனைகளுக்கு நீங்களே முடிவு கண்டுபிடியுங்கள் என்று சொல்லுகிறார். பெரிய தொழில்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் இந்நாட்களில் கைக்கொள்ளும் ஒரு முக்கியமான யுக்தியும் இதுதான். தங்களுடைய ஊழியர்கள் பிரச்சனைகளைத் தங்களிடம் கொண்டுவருவதை நிர்வாகிகள் விரும்புகிறதில்லை. நீங்களே பிரச்சனைகளைத் தீர்க்க வழி கண்டுபிடியுங்கள் என்றுதான் சொல்லுகிறார்கள். உன்னைச் சுற்றியிருக்கும் பிரச்சனைகளைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கிறாயோ? அவைகளைத் தீர்க்க வழி கண்டுபிடி என்பது இன்றைய பாடம். If you are not part of the solution, you are part of the problem.

ஜெபம்:

ஆண்டவரே, பிரச்சனைகளைத் தீர்க்கும்படி வழி கண்டுபிடிக்க எனக்கு உதவிசெய்யும். ஆமென்.