காலைத் தியானம் – பிப்ரவரி 03, 2022

மத் 14: 22 – 36

ஆண்டவரே! நீரேயானால் . . .  

                                 இயேசு கடலின் மேல் நடக்கிறதைக் கண்டு, சீஷர்கள் கலக்கமடைந்து, ஆவேசம் (ஆவி அல்லது பேய்) என்று சொல்லி, பயத்தினால் அலறியதற்குக் காரணம் என்ன? இயேசு அதுவரை செய்திராத ஒன்றை செய்தார். கடல் நீரின்மேல் நடந்தார். இது இயற்கையின்படி கூடாத காரியம்தான்! மனிதனால் கூடாத காரியம்தான். இயேசு எத்தனையோ இயற்கைக்கு அப்பாற்பட்ட, மனித சக்திக்கு அப்பாற்பட்ட (super natural) காரியங்களைச் செய்வதைப் பார்த்திருந்த சீஷர்கள் அவர் கடல் நீரின் மேல் நடப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. குருடரைப் பார்வையடையச் செய்தவர், செவிடர்களைக் கேட்கச் செய்தவர், மரித்தவர்களை உயிரோடு எழுப்பியவர், தண்ணீர் மீது நடப்பார் என்று சீஷர்கள் எதிர்பார்க்கவில்லை. உன் வாழ்க்கையிலும் அவர், நீ எதிர்பாராத அற்புதங்களைச் செய்யக்கூடும். அவரால் கூடாதது ஒன்றுமேயில்லை.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் பிறர் வாழ்க்கையில் செய்திராத அற்புதங்களைக் கூட என் வாழ்க்கையில் செய்ய முடியும் என்று நம்புகிறேன். உம்மால் கூடாதது ஒன்றுமில்லை. ஆமென்.