மத் 15: 10 – 20
அவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடராயிருக்கிறார்கள்
பரிசேயருக்கு மக்களை நல்வழியில் நடத்தும் மிகப் பெரிய பொறுப்பு இருந்தது. அவர்களோ தங்களைப் பற்றியும், மற்றவர்கள் தங்களைப் பரிசுத்தவான் என்று நினைக்கவேண்டும் என்பதைப் பற்றியும் மாத்திரமே கவலைப் பட்டார்கள். உலக மக்களின் இரட்சகரும் தேவ குமாரனுமாகிய இயேசு கிறிஸ்து அவர்களுடைய கண்முன் இருந்தும் அவரை அறிந்துகொள்ள விருப்பமில்லாத குருடராயிருந்தார்கள். இயேசுவுக்கு அவர்கள்மீது வருத்தமும் கோபமும் தான் இருந்தது. இந்த காலத்திலும் வேதத்தின் ஒருசில வசனங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு, தங்கள் விருப்பப்படி போதிக்கும் போதகர்கள் உண்டு. அவர்களும் குருடரை வழிகாட்டும் குருடர்கள்தான். அவர்களைவிட்டு விலகுகங்கள்.
ஜெபம்:
ஆண்டவரே, தவறான போதனைகளைக் கேட்டு நான் வஞ்சிக்கப்படாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.