காலைத் தியானம் – பிப்ரவரி 06, 2022

மத் 15: 21 – 28

அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை

                                 இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து முதலாவதாக இஸ்ரவேலரைப் பாவத்தின் பிடியிலிருந்து இரட்சித்து, அதற்குப்பின் அவர்கள் மூலமாக உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று வைத்திருந்த திட்டத்தை நாம் அறிவோம். அதற்காக அவர் கானானியப் பெண்ணைப் புறக்கணிப்பாரா? இல்லவே இல்லை. புறஜாதியாருக்கு ஒரு நன்மையும் செய்யக்கூடாது என்று நினைத்திருந்தால் ரோமனான நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனை சுகப்படுத்தியிருக்க மாட்டார். இங்கு இயேசு கிறிஸ்து கானானிய பெண்ணின் விசுவாசம் எவ்வளவு உறுதியானது என்பதைச் சோதிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் மவுனத்திற்கு அதுதான் அர்த்தம். சில சமயங்களில் உன் ஜெபத்திற்குப் பதில் உடனேயே கிடைக்காமல் இருக்கலாம். அதற்காக உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்கவில்லை என்று நினைத்துவிடக் கூடாது. அவருடைய மவுனத்தின் காரணம் இப்போது உனக்குப் புரியாது.

ஜெபம்:

ஆண்டவரே, அந்த கானானியப் பெண்ணுக்கு இருந்த விடாமுயற்சி என்னிடமும் காணப்படுவதாக. ஆமென்.