மத் 16: 13 – 20
மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை
மாம்சமும் இரத்தமும் சேர்ந்ததுதான் இந்த மனித உடல். இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதை எந்த மனிதனும் உனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை என்பதைத்தான் இயேசு இவ்விதமாகச் சொன்னார். பேதுரு கர்த்தரோடு வைத்திருந்ததைப் போன்ற உறவை நீயும் கர்த்தரோடு வைத்திருந்தால் உலகம் உனக்கு சொல்லிக்கொடுக்க முடியாதவைகளைப் பரிசுத்த ஆவியானவர் உனக்கு வெளிப்படுத்துவார். எந்த குருவும் சொல்லிக்கொடுக்க முடியாதவைகளை உன் தேவன் உனக்கு வெளிப்படுத்துவார். உலகம் தரக்கூடாத ஞானத்தை நீ பெறுவாய்.அனுதினமும் வேதத்தில் ஒரு சில வசனங்களையும் புத்துயிரின் காலைத் தியான பகுதியையும் மாத்திரம் வாசித்துவிட்டு எழுந்து போய்விடுகிறாயா அல்லது உன் ஆண்டவரோடு பேசி அவர் உன்னோடு பேசுவதற்காகக் காத்திருக்கிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, தினமும் என்னோடு பேசும். நான் செய்ய வேண்டியவைகளை எனக்குப் போதியும். ஆமென்.