மத் 16: 21 – 28
எனக்குப் பின்னாகப் போ சாத்தானே
பாவத்தில் விழுந்து தேவனை விட்டு விலகி ஓடிவிட்ட மனிதர்களாகிய நம் அனைவரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளதானே இயேசுகிறிஸ்து மனிதனாக இப்பூமிக்கு வந்தார்! அதற்கு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுவதைத் தவிர வேறே வழியே இல்லை என்பதைப் பிதாவாகிய தேவன் முன்குறித்து வைத்துவிட்டார். இயேசுகிறிஸ்து மரிக்காமலேயே உலகத்தைத் தம்முடையதாக்கிக் கொள்ள சாத்தான் ஒரு குறுக்கு வழி சொன்னான் (மத்தேயு 4:9). அதற்கு இயேசு கொடுத்த பதில் ‘அப்பாலே போ சாத்தானே’ என்பது. இன்று வாசித்த பகுதியில் நீர் மரிக்கக்கூடாது என்று இயேசுவைக் கடிந்துகொண்ட பேதுருவுக்குக் கிடைத்த பதிலும் அதுதான். கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்குத் தடையாக நிற்கும் எந்த செயலும் சாத்தானுடைய செயல்தான். உன் ஆண்டவருடைய சித்தத்திற்கு விரோதமாக எதையும் சிந்தித்துவிடாதே.
ஜெபம்:
ஆண்டவரே, தெரிந்தோ தெரியாமலோ உம்முடைய சித்தத்திற்கு விரோதமாக நான் செயல்பட்டுவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.