காலைத் தியானம் – பிப்ரவரி 10, 2022

மத் 17: 1 – 13

முகங்குப்புற விழுந்து மிகவும் பயந்தார்கள்

                                 ஆண்டவருடைய பிரசன்னம் மிகவும் பிரமாண்டமானதும், நம்மைப் பிரமிக்க வைக்கும் சக்தி வாய்ந்ததுமானது. We cannot stand before His awesome presence. அவர் மகா பரிசுத்தமுள்ள தேவன். அவரை இயேசுவோடிருந்த சீஷர்களே பார்க்க முடியவில்லை. அவருடைய சத்தம் அவர்களை நடுங்கச் செய்தது. இயேசுவோடிருந்த சீஷர்களுக்கே அந்த நிலை என்றால், நம்முடைய நிலை எப்படி இருக்கவேண்டும்! ஆனால் நம்மைப் பார்த்தும் இயேசு பயப்படாதேயுங்கள் என்று சொல்லுகிறார். ஏனென்றால் நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்து நம்மைக் கழுவி விட்டார். நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவரைப் பிடித்துக் கொண்டால் போதும். தேவனுடைய ஒளியைக் கண்டும் அவருடைய சத்தத்தைக் கேட்டும் பயந்து ஓட வேண்டியதில்லை. நாம் கிருபை பெற்றவர்கள்.

ஜெபம்:

ஆண்டவரே, விலை மதிக்க முடியாத உம்முடைய கிருபைக்காக நன்றி சுவாமி. ஆமென்.