காலைத் தியானம் – பிப்ரவரி 11, 2022

மத் 17: 14 – 27

மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார். . . . மிகுந்த துக்கமடைந்தார்கள்

                               இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிடுவார் என்று சொன்னால் சீஷர்கள் மகிழ்ச்சியில் குதித்திருக்க வேண்டும் அல்லவா? அப்படிச் செய்யாமல் ஏன் மிகுந்த துக்கமடைந்தார்கள்? இரண்டு காரணங்கள் இருந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. முதலாவதாக, சீஷர்கள் தங்களுடைய திட்டங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாது என்று அறிந்துகொண்டார்கள். அதாவது யூதர்களுக்கு ராஜாவாக வந்த இயேசுகிறிஸ்து, ரோமர்களிடமிருந்து தங்களை விடுவித்து, ஏற்படுத்தப் போகும் அரசாட்சியில் தங்களுக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த சீஷர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும்தான் ஏற்பட்டது. இரண்டாவதாக, இயேசு கொலை செய்யப்படுவார் என்று கேட்ட செவிகளுக்கு அவர் உயிர்த்தெழுவார் என்ற வார்த்தைகள் கேட்கவில்லை. உன்னுடைய திட்டங்கள் நிறைவேறவில்லை என்று வருத்தப்படாதே. உன் ஆண்டவருடைய சத்தத்தை முழுவதுமாகக் கேள். ஒரு பகுதியை மாத்திரம் கேட்டுக்கொண்டு உன் மனதைக் குழப்பிக்கொள்ளாதே.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய சித்தத்திற்கு உட்படாத என் திட்டங்களை எனக்குச் சுட்டிக் காட்டும். ஆமென்.