காலைத் தியானம் – பிப்ரவரி 13, 2022

மத் 18: 6 – 14

எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ!

                               இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களுமே திராட்சரசம் குடித்தார்கள். ஆகையால் நான் அளவோடு மதுபானம் அருந்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பவர்கள் அநேகர் உண்டு. புகைப்பிடிக்கக் கூடாது என்று வேதாகமத்தில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்பவர்களும் உண்டு. இது சரியா தவறா என்ற கேள்வி உன் மனதில் தோன்றும் நேரங்களில் இரண்டு ஆலோசனைகளை உன் நினைவில் வைத்துக்கொள். முதலாவதாக, உன்னுடைய உள்மனது உன் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதை நீ அலட்சியம் செய்யாதே. இரண்டாவதாக, எந்த செயலைக் குறித்து கேள்வி எழுகிறதோ, அந்த செயல் பிறரை, குறிப்பாக சிறுவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிறதா அல்லது அவர்களுக்கு அது இடறலாக இருக்கின்றதா என்று யோசித்துப்பார். நீ செய்ய வேண்டியது உனக்கே தெரியும்.

ஜெபம்:

ஆண்டவரே, இதுவரை நான் செய்துவிட்ட தவறுகளைத் தயவாய் மன்னியும். யாருக்கும் இடறல் உண்டாக்கிவிடாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.