காலைத் தியானம் – பிப்ரவரி 14, 2022

மத் 18: 15 – 20

நீயும் அவனும் தனித்திருக்கையில்

                               நம்முடைய எதிர்பார்ப்புக்கு எதிராக அல்லது நம்முடைய திட்டங்களுக்கு மாறாக ஒருவன் செயல்பட்டுவிட்டாலே போதும், அவனை நாம் சும்மா விடுவதில்லை. நமக்கு விரோதமாகக் குற்றம் செயதவனை எப்படி சும்மா விட முடியும்? இயேசுகிறிஸ்து அவனைச் சும்மா விடச் சொல்லவில்லை. அன்புடம் அவனோடு பேசி அவனுடைய குற்றத்தை அவனுக்கு உணர்த்தி, அவனை நேர்வழியில் கொண்டுவர வேண்டும் என்பது அவருடைய போதனை. ஒருவன் செய்த தவறைக்குறித்து ஊரெல்லாம் பேசுவது நமது பொழுதுபோக்காகி விட்டது. அது நாம் செய்யும் பெரிய குற்றம். உனக்கு விரோதமாக ஒருவன் குற்றம் செய்யும்போது கூட, அவன் தனித்திருக்கும்போது அவனுடன் பேசி அவனை நேர்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் இன்றைய பாடம். ஆண்டவரின் இரக்கத்தைப் பெற்ற நீ மற்றவர்களிடம் இரக்கம் காட்டு.

ஜெபம்:

ஆண்டவரே, பிறருடைய குற்றங்களைக் குறித்து பலருடன் பேச விரும்பும் என் மனதை மாற்றியருளும். ஆமென்.