காலைத் தியானம் – பிப்ரவரி 15, 2022

மத் 18: 21 – 35

மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால்

                               To err is human, To forgive is divine என்ற பழமொழியை நம்மில் பலரும் அறிவோம். தவறு செய்வது மனித சுபாவம். மன்னிப்பதோ தெய்வீகச் சுபாவம் என்ற வார்த்தைகளைச் சிறு வயதிலிருந்தே கேடுப் பழகிவிட்டோம். ஆகையால் நாம் தவறு செய்வது (அல்லது பாவம் செய்வது) தவிர்க்க முடியாதது என்றும், மன்னிப்பது ஆண்டவருடைய வேலை என்றும் நினைத்துவிடுகிறோம். இயேசுகிறிஸ்துவோ, தவறு (பாவம்) செய்யாமல் இருப்பதும் மன்னிப்பதும் (இரண்டுமே) மனித சுபாவமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். ஏனோ தானோ என்றல்ல, மனப்பூர்வமாய் நாம் மன்னிக்க வேண்டும் என்பது அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நிபந்தனை. எத்தனையோ வருடங்களுக்கு முன், ஒருவன் உனக்கு விரோதமாகச் செய்தவைகளை இன்னும் மனதில் வைத்துக்கொண்டிருக்கிறாயோ? மனப்பூர்வமாய் மன்னித்துவிடு. ஆசீர்வாதம் பெறுவாய்.

ஜெபம்:

ஆண்டவரே, என் மனதில் தேங்கிக் கிடக்கும் மனக்கசப்புகளை முற்றிலுமாக அகற்றி, மனப்பூர்வமாய் மன்னிக்கக் கற்றுதாரும். ஆமென்.