காலைத் தியானம் – பிப்ரவரி 17, 2022

மத் 19: 10 – 15

மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

                               இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் அனைத்தும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் சத்தியம். விவாகரத்து பற்றிய போதனைகளை ஏற்றுக்கொள்வது இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கே கடினமாக இருந்தது. வேதத்தில் நமக்குப் பிரியமான அல்லது வசதியான பகுதிகளை மாத்திரம் ஏற்றுக்கொள்வேன் என்று நினைப்பது அல்லது சொல்வது மிகவும் தவறான காரியம். வேதத்தின் புத்தகங்கள் அனைத்துமே பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டவை. அவர்தான் வேதாகமத்தின் ஆசிரியர். பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சில பகுதிகள் இந்த காலத்துக்குப் பொருந்தாதவை என்று சொல்வது சரியல்ல. இது புதிய ஏற்பாட்டுக் காலம். ஆகையால் பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் இந்நாட்களுக்குப் பொருந்தாது என்று சொல்லமுடியாது. இதற்கு ஒரே விதிவிலக்கு, இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட குடியிருப்புச் சட்டங்கள் (civil law) மாத்திரம்தான். அவை அந்நாட்களில் இஸ்ரவேல் என்னும் நாட்டில் வாழ்ந்த மக்களுக்காகக் கொடுக்கப்பட்டவை. பரிசுத்த வேதாகமத்தின் கட்டளைகளை முழுவதுமாகக் கைக்கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகள் கைக்கொள்வதற்குக் கடினமாக இருந்தாலும் அவைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.