காலைத் தியானம் – பிப்ரவரி 20, 2022

மத் 20: 1 – 16

ஒரு மணி நேரம் மாத்திரம் வேலை செய்தார்கள்  

                               ஒரு மணி நேரம் வேலை செய்தவனுக்கும் 12 மணி நேராம் வேலை செய்தவனுக்கும் ஒரே சம்பளமா? இது எப்படி நியாயம் ஆகும்? பரலோக ராஜ்யத்தின் நியதிகள் நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் அடிக்கடி வேதாகமத்தில் பார்த்திருக்கிறோம். இளவயதிலிருந்தே நீதிமானாக வாழ்ந்த ஆபிரகாமுக்கு பரலோக ராஜ்யத்தில் இடம் உண்டு. மரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் இயேசுகிறிஸ்துவிடம் மன்றாடிய, சிலுவையில் அறையப்பட்ட  கள்ளனுக்கும் பரலோக ராஜ்யத்தில் இடம் உண்டு (லூக்கா 23:39-43). கெட்ட குமாரன் உவமையில், தகப்பனோடேயே இருந்த மூத்தவனும் குமாரன்தான். தன்னுடைய பாகத்தின் செல்வத்தையெல்லாம் அழித்து, மிகவும் கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து, பின்பு மனந்திரும்பி வந்த இளையவனும் தகப்பனுடைய குமாரன் தான். உன் ஆண்டவருடைய கிருபையையோ, இரக்கத்தையோ, பரலோக நியதிகளையோ கேள்வி கேட்காதே.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வழிகள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டாதவை. பிறருடைய ஆசீர்வாதங்களைப் பார்த்து நான் எரிச்சலடையாதபடி என் மனதைக் காத்தருளும். ஆமென்.