காலைத் தியானம் – பிப்ரவரி 21, 2022

மத் 20: 17- 34

இயேசு மனதுருகி  

                               சமுதாயத்தில் ஆடு மேய்ப்பவர்கள் மிகவும் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டவர்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு முதலாவதாக மேய்ப்பர்களுக்குத்தான் அறிவிக்கப்பட்டது. சமுதாயத்தில் சிறு பிள்ளைகள் முக்கியமில்லாதவர்கள் என்று கருதப்பட்டார்கள். இயேசு அவர்களுக்குத் தம் அருகில் முக்கியமான இடத்தைக் கொடுத்து, அவர்கள் தம்மிடம் வருவதைத் தடை செய்யக்கூடாது என்று வயதில் பெரியவர்களைக் கடிந்து கொண்டார். சமுதாயத்தில் குருடர்கள் எந்த பிரயோஜனமும் இல்லாதவர்கள் என்று கருதப்பட்டார்கள். ஆனால் இயேசுவுக்கு அவர்களும் முக்கியமானவர்கள் என்பதை செயலில் காண்பித்தார். இயேசு இரக்கமுள்ளவர். நீ துன்பங்களை அனுபவிக்கும்போது அவர் மனதுருகி உனக்கும் உதவி செய்ய தயாராக இருக்கிறார். சமுதாயம் உன்னை எப்படிப் பார்த்தாலும் நீ அவருக்கு மிகவும் முக்கியமானவன்(ள்).

ஜெபம்:

ஆண்டவரே, என் துன்பங்களை நீக்கி என்னைத் தூக்கி நிறுத்தும். ஆமென்.