காலைத் தியானம் – பிப்ரவரி 22, 2022

மத் 21: 1 – 9

ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்  

                               இயேசு, கழுதையின் சொந்தக்காரனைப் பார்த்து, அவனிடம் கேட்டு, கழுதையையும் குட்டியையும் கொண்டுவாருங்கள் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவரோ சீஷர்களை நோக்கி, கழுதையையும் குட்டியையும் அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்; யாராவது கேட்டால் இவ்விதமாய் பதில் சொல்லுங்கள் என்று சொன்னார். இயேசு ஏன் இவ்விதமாகச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் குருடர்களைப் பார்வையடையச் செய்தவர், சப்பாணிகளை நடக்கச் செய்தவர், கழுதை வேண்டும் என்ற ஒரு சிறிய விஷயத்தில் கூட எல்லா நுணுக்கங்களையும் திட்டமிட்டிருந்தார். நீ உன் ஆண்டவரிடம் பெரியக் காரியங்களுக்காக மாத்திரம் ஜெபிக்கவேண்டும் என்பதில்லை. சின்ன காரியங்கள் கூட அவருக்குத் தெரியும்.

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய சிறிய தேவைகளைக் கூட நீர் பார்த்துக்கொள்ளும். ஆமென்.