காலைத் தியானம் – பிப்ரவரி 23, 2022

மத் 21: 10 – 17

பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து  

                              தேவாலயம் வியாபார இடமாக மாறிவிட்டதைக் குறித்து இயேசு கோபமடைந்தார். பிரதான ஆசாரியருக்கும் வேதபாரகருக்கும் அதில் தவறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. குருடரும் சப்பாணிகளும் தேவாலயம் வந்து இயேசுவிடம் சுகம் பெற்றார்கள். அது பிரதான ஆசாரியருக்கும் வேதபாரகருக்கும் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய காரியமாகத் தோன்றவில்லை. மாறாக, அது அவர்களைக் கோபமடையச் செய்தது. சிறுவர்கள் இயேசுவைக் குறித்து, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று ஆர்ப்பரித்தார்கள். அதுவும் பிரதான் ஆசாரியருக்கும் வேதபாரகருக்கும் கோபத்தை உண்டாக்கிவிட்டது. நீ எப்படிப்பட்ட காரியங்களுக்காகக் கோபப்படுகிறாய்? அநீதியைக் கண்டு கோபப்படுகிறாயா? திக்கற்றோர் ஒடுக்கப்படுவதைப் பார்த்து கோபப்படுகிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, நீர் வெறுக்கும் காரியங்களை நானும் வெறுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.