காலைத் தியானம் – பிப்ரவரி 24, 2022

மத் 21: 18 – 22

உடனே அத்தி மரம் பட்டு போயிற்று 

                              எந்த மரமும் ஒரு சில வினாடிகளிலோ அல்லது நிமிடங்களிலோ பட்டுப் போகிறதில்லை. குறைந்த பட்சம் சில நாட்களாவது ஆகும். அந்த குறிப்பிட்ட அத்தி மரமோ, இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைக் (சாபத்தைக்) கேட்டவுடன் பட்டுபோயிற்று. சீஷர்கள், மிகவும் துரிதமாக பட்டுப் போன அதிசயத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நாமோ இதில் வேறொரு பாடத்தைக் கவனிக்க வேண்டும். கனி கொடுக்காத மரம் அழிக்கப்படும் என்பதுதான் அந்த பாடம். நீ கனி கொடுக்கிற மரமாக வாழ்கிறாயா? நியாயத்தீர்ப்பு நாள் சமீபமாயிருக்கிறது.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் விரும்பும் கனிகள் எப்பொழுதும் என்னிடத்தில் காணப்படட்டும். ஆமென்.