காலைத் தியானம் – பிப்ரவரி 25, 2022

மத் 21: 23 – 32

போகிறேன் ஐயா, என்று சொல்லியும் போகவில்லை 

                              அந்நாட்களில் இருந்த இஸ்ரவேல் மக்கள் இரண்டாவது குமாரனைப் போலிருந்தார்கள். ஆண்டவருடைய சித்தத்தின்படி செயல்படாதவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் தொடர்பில்லை. ஆண்டவருடைய சித்தத்தின்படி செயல்படுகிறேன் என்று சொல்லியும் கீழ்ப்படியாமல் இருந்தார்கள். அவர்கள் போலியானவர்கள். வெளிப்புறத்தில் மாத்திரம் நல்லவர்களைப் போல தோற்றமளித்தார்கள். நீ யாரைப் போலிருக்கிறாய்? இரண்டாவது குமாரனைப் போல இருந்துவிடாதே. உன் ஆண்டவர் உள்ளங்களைப் பார்க்கிறவர். வெளித் தோற்றங்களால் அவரை ஏமாற்றமுடியாது.

ஜெபம்:

ஆண்டவரே, வார்த்தைகளால் அல்ல, செயலில் உமக்குக் கீழ்ப்படிந்திருக்க உதவி செய்யும். ஆமென்.