காலைத் தியானம் – பிப்ரவரி 26, 2022

மத் 21: 33 – 46

ஆகாததென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று 

                              இயேசுகிறிஸ்து சொன்ன உவமையில் தோட்டத்தின் எஜமான்தான் பிதாவாகிய தேவன். தோட்டம் இஸ்ரவேலரைக் குறிக்கும். யூதர்களின் மதத்தலைவர்கள் தான் தோட்டக்காரர். தீர்க்கதரிசிகள் தான் அடித்துக் கொல்லப்பட்ட ஊழியக்காரர்கள். இயேசு கிறிஸ்துவே தோட்ட எஜமானின் குமாரன். வேறே தோட்டக்காரன் என்பது புறஜாதியாரைக் குறிக்கிறது. இயேசுகிறிஸ்துவை யூத மதத் தலைவர்களும் யூதரில் அநேகரும் ஏற்றுக்கொள்ளாமல் கொன்றுபோட்டபோதிலும் இயேசுவே மூலைக்குத் (தேவனுடைய ஆலயத்துக்குத்) தலைக்கல்லாகிவிட்டார். அந்த கல்லின் மேல் கட்டுகிற எவனும் நிலைத்திருப்பான்.  அந்தக் கல்லின்மீது மோதுகிறவன் நொறுங்கிப் போவான். நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த கல், நசுக்கிப் போடும் கல்லாக மாறுவது நிச்சயம். நாட்களைத் தள்ளிப் போடாதே. உன் வாழ்க்கையில் இயேசுவை அனுமதிக்காத இடங்கள் உண்டென்றால், இன்றே உன் நிலையைச் சரி செய்துகொள்.

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கையில் உமக்குப் பிரியமில்லாத பகுதி ஏதாவது இருந்தால் அதை இன்றே சரி செய்துவிடும். ஆமென்.