மத் 22: 1 – 14
கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய்?
அந்த காலத்தில் திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு “கலியாண வஸ்திரம்” கொடுக்கப்பட்டது. கலியாண வஸ்திரத்தைப் போட்டுக்கொள்ளாதவன் எவனும் திருமண விருந்தில் பங்கு பெற முடியாது. வழிச்சந்திகளிலே போய்க்கொண்டிருந்த நாம் அனைவரும் அழைக்கப்பட்டுவிட்டோம். இயேசுகிறிஸ்து இரட்சிப்பு என்னும் வஸ்திரத்தை நமக்குக் கொடுத்துவிட்டார். சங்கீதம் 132:16; ஏசாயா 61:10, வெளி 3: 4-5; 19:7-8 ஆகிய வசனங்களை எடுத்து வாசியுங்கள். இரட்சிப்பு என்னும் ஆடையை அணிந்துகொள்ளாமல் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.
ஜெபம்:
ஆண்டவரே, இரட்சிப்பு என்ற ஆடையை அணிந்துகொண்டு நீதிமானாக்கப்பட்டவனாய் பரலோகத்தில் பிரவேசிக்க என்னை ஆயத்தப்படுத்தும். ஆமென்.