மத் 22: 23 – 33
தேவன் . . . ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்
பரிசேயரும் ஏரோதியரும் சாதிக்க முடியாததை தாம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சதுசேயர் இயேசுவிடம் வந்தார்கள். சதுசேயருக்கு மரணத்திற்குப்பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பதில் நம்பிக்கை கிடையாது. ஏனென்றால் ஆதியாகமம் முதல் உபாகமம் வரையுள்ள மோசேயின் புத்தகங்களில் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைக் குறித்து (வெளிப்படையாக) ஒன்றும் சொல்லப்படவில்லை என்பது அவர்கள் வாதம். இயேசு, அவர்கள் விசுவாசித்த மோசேயின் புத்தகங்களில் ஒன்றான யாத்திராகமத்தின் 3ம் அதிகாரம் 6ம் வசனத்தை மேற்கோள்காட்டி, தேவன் மரித்தோரின் தேவன் அல்ல என்றும் அவர் உயிர் உள்ளவர்களின் தேவனானபடியால் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் பூலோக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார்.
ஜெபம்:
ஆண்ஆண்டவரே, நான் என் மூளைக்கு எட்டாத உம்முடைய காரியங்களைக் குறித்து சந்தேகப்படாதபடி என்னை காத்துக்கொள்ளும். ஆமென்.