காலைத் தியானம் – மார்ச் 02, 2022

மத் 22: 34 – 46

அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி?

                              இயேசு கிறிஸ்து யார் என்ற கேள்விக்கு அறிவுப்பூர்வமாக இல்லாமல் அனுபவப்பூர்வமாக பதில் சொல்லக் கூடியவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள். பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் ஆகிய ஒவ்வொரு குழுவினரும் எப்படியாவது இயேசுவை மடக்கி விட வேண்டும் என்று பல கேள்விகளைக் கேட்டும் வெற்றிபெறவில்லை. இப்போது இயேசு பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். பரிசேயரை மடக்கி விட வேண்டும் என்பது இயேசுவின் நோக்கமில்லை. பரிசேயர், உண்மையை – அதாவது தான் தேவனுடைய குமாரன் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இயேசுவின் நோக்கம். கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் வருவார் என்பதைப் பரிசேயர் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் மூலமாக அறிந்திருந்தார்கள் ஆனால் அவர் தேவனுடைய குமாரன் என்பதை அவர்கள் அறியவில்லை. உனக்கு இயேசு கிறிஸ்துவை அனுபவப்பூர்வமாக தெரியுமா?

ஜெபம்:

என் கர்த்தராகிய இயேசுவே, நீர் உம்மை எனக்கு வெளிப்படுத்தி விட்டதற்காக நன்றி சுவாமி. ஆமென்.