காலைத் தியானம் – மார்ச் 05, 2022

மத் 21: 25- 39

நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து

                              நீதிமான்களையும் தீர்க்கதரிசிகளையும் கொலை செய்துவிட்டு அவர்களுடைய சமாதிகளை சிங்காரிப்பதினால் என்ன பயன்? ஆனால் அதைத்தான் யூதர்களில் ஒரு பகுதியினர் செய்துவந்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களும் அதையே செய்தார்கள். இயேசுவைக் கொலை செய்துவிட்டு நியாயப்பிரமாணங்களின் படி வாழ்வதாகச் சொல்லிக்கொண்டார்கள். நாம் ஒருவேளை யாரையும் கொலை செய்யாமல் இருக்கலாம். ஆனால் பெற்றோரையும், பெற்றோரின் பெற்றோரையும், அவர்களை அன்புடன் கவனிக்க வேண்டிய காலங்களில் கவனிக்காமல் இருந்துவிட்டு, மரித்த பின் அவர்களுடைய புகைப்படங்களுக்கு மாலையிட்டு நடு அறையில் மாட்டி வைப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? உன் செயல்களின் நோக்கத்தை ஆராய்ந்து பார்.

ஜெபம்:

ஆண்டவரே, மற்றவர்கள் என்னை மெச்ச வேண்டும் என்ற எண்ணத்தோடு வேஷம் போடாத படி, உண்மையான அன்புள்ளவனாக என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.