காலைத் தியானம் – மார்ச் 06, 2022

மத் 24: 1 – 14

நமுடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்

                              வாழ்க்கையில் ஏதோ ஒரு நாள் இயேசுவே என் பாவங்களை மன்னித்து என்னை இரட்சியும் என்று ஜெபித்து விட்டு, அதற்குப் பிறகு எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்று இருந்துவிட்டால் இரட்சிக்கப்பட முடியாது. நல்ல ஆரம்பம் மிகவும் முக்கியம் தான். ஆனால் இவ்வுலகில் வாழும் கடைசி நிமிடம் வரை இயேசுவில் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான். கிறிஸ்தவ வாழ்க்கையை ஆரம்பித்த சில நாட்களிலேயே அதைக் கைவிட்டு அகன்ற பாதையை நோக்கி ஓடி விட்டவர்கள் சிலர் உண்டு. விசுவாசத்தில் பல ஆண்டுகள் நிலைத்து இருந்துவிட்டு திடீரென்று விழுந்துவிட்ட ஆத்துமாக்களும் உண்டு. அவனும் மனிதன் தானே; எல்லோரும் செய்வதை தானே அவனும் செய்கிறான் என்று சாக்குபோக்கு சொல்லலாம். ஆனால் இயேசுவோ முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்று சொல்லிவிட்டார். ஆவிக்குரிய வாழ்க்கையில் ஜாக்கிரதையாய் இரு.

ஜெபம்:

ஆண்டவரே, முடிவுபரியந்தம் உமது கிருபை என்னைத் தாங்கட்டும். ஆமென்.