காலைத் தியானம் – மார்ச் 07, 2022

மத் 24: 15 – 36

தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்

                              இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் நடக்கவிருக்கும் அநேக கொடுமைகளைக் குறித்து இன்று வாசித்த பகுதியில் பார்த்தோம். பூமியதிர்ச்சி, யுத்தம், கொள்ளை நோய் போன்ற அறிகுறிகள் இன்று உலகத்தில் காணப்பட்டாலும், வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ‘மிகுந்த உபத்திரவம்’ இன்னும் தோன்றவில்லை. இயேசு கிறிஸ்துவின் வருகையின் நேரம் யாருக்கும் தெரியாது என்பதால் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள பயங்கரங்களும் திடீரென்று ஆரம்பித்துவிடலாம். மிகுந்த உபத்திரவத்தின் நாட்கள் குறைய வேண்டுமானால் அது தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஜெபத்தினால் மட்டுமே நிறைவேறும். இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உபத்திரவங்கள் நீங்க வேண்டும் என்று நீ ஜெபிக்கிறாயா? கர்த்தருடைய கிருபைக்காக மன்றாடுகிறாயா? நீ தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் கூட்டத்தில் இருக்கிறாயா? நீ எந்நேரமும் ஆயத்தமாக இருக்கிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, கடைசி வரை நானும் நீர் தெரிந்து கொண்டவர்களில் ஒருவனாக இருக்க உதவி செய்யும். ஆமென்.