காலைத் தியானம் – மார்ச் 08, 2022

மத் 24: 37 – 51

எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்

                              சகலத்தையும் உருவாக்கினவரும், உன்னையும் என்னையும் படைத்தவருமாகிய கர்த்தர் தான் எஜமான். நீ இந்த உலகில் அவரால் வைக்கப்பட்டிருக்கிற ஊழியக்காரன். உனக்கு அவர் வேலை கொடுத்திருக்கிறார். மற்றவர்களுக்கு ஆகாரம் கொடுத்து அவர்களைப் பராமரிப்பதே அந்த வேலை (வசனம் 45). அந்த வேலையைச் செய்யாமல் உன்னுடைய சுயநலனுக்காக பணம் சம்பாதிப்பதிலேயே உன் நேரத்தை எல்லாம் செலவழிக்கிறாயோ? அல்லது மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டு, உன்னைப் பரிசுத்தவான் என்று எண்ணிக்கொண்டு, அவர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்து விடுகிறாயோ? உன் எஜமான் திரும்பிவரும்போது நீ உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனாகக் காணப்படுவாயா? உன் எஜமானை ஏமாற்றமடையச் செய்யாதே.

ஜெபம்:

ஆண்டவரே, உண்மையுள்ள ஊழியக்காரனாக நான் மற்ற மனிதரைப் பராமரிக்க எனக்கு உதவி செய்யும் ஆமென்.