காலைத் தியானம் – மார்ச் 11, 2022

மத் 25: 31 – 33

மேய்ப்பனானவன் . . . பிரிக்கிறது போல

                              நம் ஆண்டவருக்கும் நமக்கும் உள்ள உறவு மேய்ப்பன் – மந்தை உறவைப் போன்றது என்பதை இன்று வாசித்த வேத பகுதியில் பார்க்கிறோம். இந்த உறவிலும் மேய்ப்பனுக்கு இரண்டு குணாதிசயங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். காக்கும், பராமரிக்கும், வழி நடத்தும் குணாதிசயம் மேய்ப்பனின் முதல் குணாதிசயம். இரண்டாவது குணாதிசயம், செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரித்து எடுக்கும் குணாதிசயம். காத்து, பராமரிக்கும் ஆண்டவரை நாம் விரும்புகிறோம். ஆனால் பிரித்தெடுக்கும் ஆண்டவரைக் குறித்து நினைக்க நமக்கு விருப்பமில்லை. பிரித்தெடுக்கும் நாள் ஒன்று நிச்சயமாக உண்டு. நாம் ஒவ்வொருவரும் அந்த நாளை எதிர்கொள்ளவேண்டும். நீ வலது பக்கத்தில் நிற்பாயா அல்லது இடது பக்கத்தில் நிற்பாயா?.

ஜெபம்:

ஆண்டவரே, உமது வலது பக்கத்தில் நிற்கும்படி என்னைக் காத்து வழி நடத்தும். ஆமென்.