மத் 25: 34 – 46
ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து
நம்முடைய ஆண்டவர் தான் ராஜா. நாம் அவருடைய ராஜ்ஜியத்தின் குடிமக்கள். இது நமக்கும் நம் ஆண்டவருக்குமிடையே உள்ள இன்னொரு உறவு. பூமியில் உள்ள ராஜாக்கள் பலரும் தங்களை நீதியோடு அரசாளுகிறவன் என்றும், மக்களின் துன்பங்களைப் போக்குகிறவன் என்றும் பெயர் வாங்க விரும்புவதை நாம் அறிவோம். அதற்காக பலவிதமான திட்டங்களைச் செயல்படுத்துவதையும் நாம் அறிந்திருக்கிறோம். நம்முடைய ஆண்டவராகிய ராஜாவோ தம்முடைய மக்களின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பவர். தம்முடைய மக்களில் யாராவது பசியாயிருந்தால் அதைத் தம்முடைய பசியாகவே எடுத்துக் கொள்கிறவர். பூலோக ராஜாக்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கிறார்கள். நம்முடைய பரலோக ராஜாவோ, தாம் தம் மக்களின் மீது வைத்திருக்கும் அன்பை, அவர்களும் ஒருவருக்கொருவர் காட்டுவதின் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகிறவர். பசியாய் இருப்பவர்களிடமும், உடையில்லாமல் இருப்பவர்களிடமும், வியாதியாய் இருப்பவர்களிடமும் உனக்கு அன்பு உண்டா?
ஜெபம்:
ஆண்டவரே, துன்பப்படுகிறவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பே என் செயல்களுக்குக் காரணமாக இருப்பதாக. ஆமென்.