மத்26: 1-5; 14-16
நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?
மனிதனுடைய கேள்வி இதுதான். எனக்கு என்ன கிடைக்கும்? இதில் எனக்கு ஏதாவது லாபம் உண்டா? இன்று நம்மைச் சுற்றியிருக்கும் பலரும் இதைத்தானே கேட்கிறார்கள்! என்ன கிடைக்கும் என்று கேட்கிற ஒருவனுக்கு எதைக் கொடுத்தாலும் திருப்தி இருக்காது. பணப்பையை விட மனநிறைவு மேலானது. பணப்பை மன நிறைவைக் கொடுக்கமுடியாது. யூதாசின் பணப்பை நிறைந்திருந்தது. இயேசுவைக் காட்டிக் கொடுக்க அவனுக்குக் கொடுக்கப்பட்டதில் ஒரு வெள்ளிக் காசைக் கூட அவன் செலவழிக்கவில்லை என்பது மற்றொரு விஷயம். யூதாசின் மனதில் நிறைவில்லை. கொந்தளிப்பு தான் இருந்தது. உண்மையான மன நிறைவைத் தரக் கூடியவர் இயேசு ஒருவரே.
ஜெபம்:
ஆண்டவரே, நிறைவைத் தரமுடியாத உலகக் காரியங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறேன். உம்மோடு ஒரு சில நிமிடங்கள் தான் இருக்கிறேன். எதற்கு முதலிடமும் முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட எனக்குக் கிருபை தாரும். ஆமென்.