காலைத் தியானம் – மார்ச் 14, 2022

மத் 26: 6 – 13

இந்த வீண் செலவு என்னத்திற்கு?    

                             மத்தேயு 25 ஆம் அதிகாரத்தில் ஏழைகளின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி செய்கிறவன் தேவனுக்கே உதவி செய்கிறான் என்று இயேசு சொல்லியிருப்பதைக் காண்கிறோம். அந்தப் பின்னணியில் பார்த்தால் சீடர்களின் ஆலோசனையில் என்ன தவறு? இன்றைய வேத பகுதியிலிருந்து நமக்கு இரண்டு பாடங்கள். எதற்கு, யாருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது முதல் பாடம். எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். இரண்டாவது பாடம், அன்பு கணக்குப் பார்ப்பதில்லை என்பது. ஆண்டவர் கணக்கு வைத்துக்கொண்டு நம்மை மன்னிக்கவில்லை. அவருடைய அன்புக்கு எல்லையில்லை. நாமும் கணக்குப் பாராமல் தேவனுக்கும் ஏழைகளுக்கும் கொடுப்போமாக.

ஜெபம்:

ஆண்டவரே, கணக்குப் பார்க்காமல் கொடுக்கும் உள்ளத்தை எனக்குத் தாரும். ஆமென்.