மத் 26: 17 – 25
உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்
யூதாஸ் 12 சீடர்களில் ஒருவன். இயேசுவோடு நெருங்கி பழகியவன். அவரோடு உட்கார்ந்து சாப்பிட்டவன். இயேசு செல்லும் இடமெல்லாம் சென்றவன். மற்ற சீடர்களோடு இருக்கும்போது ஒருவரும் அவனிடத்தில் குறை கண்டதாகத் தெரியவில்லை. யூதாஸ் மகா இரகசியமாகத் தன் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தான். சீடர்களில் யாருக்கும் அது தெரியாது. ஆனால் இயேசுவுக்குத் தெரியும். உன்னையும் ஒரு தலைசிறந்த கிறிஸ்தவன், கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று உலக மக்கள் அனைவரும் போற்றலாம். இயேசுவுக்கு உன் அந்தரங்க பாவங்கள் அனைத்தும் தெரியும்.
ஜெபம்:
ஆண்டவரே, உம்மோடு நெருங்கி வாழும்போதே சாத்தான் என்னை விழத்தட்ட முயற்சி செய்கிறான். நீர் என்னைப் பிடித்துள்ள பிடியை விட்டு விடாதேயும். ஆமென்.