காலைத் தியானம் – மார்ச் 16, 2022

மத் 26: 26 – 35

நான் ஒருக்காலும் இடறலடையேன் . . . உம்மை  மறுதலிக்க மாட்டேன்      

                             இது சுய பெலத்தின் மேல் நம்பிக்கை வைத்து பேதுரு பேசிய வீராப்புப் பேச்சு. அவன் எண்ணங்களில் அல்லது நோக்கங்களில் தவறு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவன் தன் சொந்த, மாம்ச பெலனில் நம்பிக்கை வைத்தான். கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்கிறார்கள் இவ்வுலக அறிஞர்கள். ஒருவேளை இவ்வுலகப் பிரகாரமாக சில காரியங்களைச் சாதித்து விடலாம். ஆனால் மாம்ச பலனைக் கொண்டு ஒரு நாளும் சாத்தானை ஜெயிக்க முடியாது. தேவன் அருளும் பெலனை கொண்டுதான் சாத்தானை ஜெயிக்க முடியும். எப்பொழுதும் இயேசுவை உன் பக்கத்தில் வைத்துக் கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் பலவீனன். நான் விழுந்து விடாதபடி என்னைத் தாங்கி, வழிநடத்தியருளும்.  ஆமென்.