மத் 26: 36 – 46
ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல
தேவனோடு நெருங்கிப் பழகி, தினமும் அவரோடு உறவாடி கொண்டிருப்பவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் அவருடைய சித்தத்திற்கு உட்படுத்த முடியும். பவுல் சிறையில் அடைப்பட்டு பலவிதமான கொடுமைகளை அனுபவித்து வந்த நேரத்திலும் பிதாவின் சித்தத்திற்கு முற்றிலும் தன்னை ஒப்புவித்து இருந்தபடியால் களிகூர்ந்து பாட முடிந்தது. தேவன் பசும்புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீர்களண்டையிலும் நடத்திக் கொண்டு செல்லும்போது அவருடைய சித்தத்திற்கும் அவருடைய வழிநடத்துதலுக்கும் நம்மை ஒப்புக் கொடுக்கிறோம். மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடத்திக் கொண்டு செல்லும்போது, இருள் சூழ்ந்த வழியிலே போக நேரிடும்போது, ஆண்டவரே உம் சித்தம் என் பாக்கியம் என்று சொல்லுகிறோமா?
ஜெபம்:
ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கிறேன். என் வழிகள் எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம் சித்தத்தின்படி வழிநடத்தும். ஆமென்.