காலைத் தியானம் – மார்ச் 19, 2022

மத் 26: 55 – 61

பேதுரு தூரத்திலே அவருக்குப் பின் சென்று       

                             இன்று வாசித்த பகுதியிலிருந்து நாம் இரண்டு காரியங்களைத் தியானிப்போம். இயேசு தனிமையாக விடப்பட்டார். ஏனென்றால் அவருடைய சீடர்கள் எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போய்விட்டார்கள் (வசனம் 56).  நாமும் தனிமையாக விடப்படும் சமயங்கள் வரலாம். அப்படிப்பட்ட சமயங்களில் தனிமையாக விடப்பட்டவரை நோக்கிப் பார்ப்போம். அவர் நமக்கு ஆறுதலையும் அரவணைப்பையும் தருவார்.  இரண்டாவது, பிரதான சீடனாகிய பேதுரு தூரத்திலே பின் சென்றான். ஏன்? அருகில் நெருங்குவதற்கு பயம்! தூரத்தில் இருந்தால்தான் தனக்கு பாதுகாப்பு இருப்பதாக பேதுரு எண்ணினான். நீ எவ்வளவு தூரத்தில் இயேசுவுக்குப் பின் செல்கிறாய்? இயேசுவை விட்டு விலகி இருந்தால் பாதுகாப்பு உண்டா அல்லது அருகில் இருந்தால் பாதுகாப்பு உண்டா என்று யோசித்துப் பார்.

ஜெபம்:

ஆண்டவரே, எப்பொழுதும் எனக்கு உமதருகே இருக்கும் பாக்கியத்தைத் தாரும். ஆமென்.