மத் 26: 62 – 68
இயேசுவோ பேசாமலிருந்தார்
நாம் பேச வேண்டிய தருணங்களில் பேசாமலிருப்பது குற்றம். உதாரணமாக, தங்களுக்காக பேச இயலாத ஏழைகள், விதவைகள், திக்கற்றோர் போன்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் பேச வேண்டும் என்பதை வேதாகமத்தின் பல பகுதிகளில் பார்க்கிறோம். அதே சமயம் நாம் பேசாமல் இருக்கவேண்டிய தருணங்களும் உண்டு. மற்ற்வர்களின் மனதை மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்வைக்கப்படும் விவாதங்களில் வெற்றி பெற்றவர்கள் எவருமில்லை. ஆகையால் உபயோகமற்ற விவாதங்களைத் தவிர்ப்பதே மேலானது. அதே போல, உன்னைக் குறித்து பிறரிடம் புரளியைக் கிளப்பிவிட்டு உன் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்பி விடுவதை, நீ பேசி கட்டுப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பதே மேலானது. கர்த்தருக்கு உன்னுடைய இருதயம் தெரியும்.
ஜெபம்:
ஆண்டவரே, பேச வேண்டிய தருணங்களில் எனக்கு மன தைரியத்தையும், மவுனமாயிருக்க வேண்டிய தருணங்களில் அதற்குத் தேவையான ஞானத்தையும் தாரும். ஆமென்.