காலைத் தியானம் – மார்ச் 21, 2022

மத் 26: 69 – 75

உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது       

                             நல்ல குணம் உடையவனை அவன் பேச்சு வெளிப்படுத்திவிடும். தீய குணமுடையவனையும் அவன் பேச்சு வெளிப்படுத்திவிடும். ஒருவன் இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தவன் என்பதையும் அவன் பேச்சு வெளிப்படுத்திவிடும். உன் பேச்சிலிருந்து நீ கிறிஸ்தவன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்கிறார்களா? உன் பேச்சு எப்படிப்பட்டது? வீண் பேச்சு (gossip) பேசாமலிருக்கிறாயா? உன் பேச்சில் நேர்மையும், நியாயமும், கருணையும், காணப்படுகிறதா? உன் பேச்சு நீ யார், எப்படிப்பட்டவன்(ள்) என்பதைக் காட்டிவிடுகிறது. சாதுரியமாகப் பேசி உன் உண்மையான நிலையை மறைத்து விட முடியாது. உன் உள்ளத்தில் கிறிஸ்து இருந்தால் மட்டும்தான் உன் பேச்சு நேர்மையும், நியாயமும், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பும் நிறைந்ததாக இருக்கும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் வாய் எப்பொழுதும் உமக்குப் பிரியமானதையே பேசும்படி என் உள்ளத்தை அன்பினால் நிறைத்தருளும். ஆமென்.