மத் 27: 19 – 26
தண்ணீரை அள்ளி .. . . கைகளைக் கழுவி
தண்ணீரைக் கொண்டு உடம்பில் ஒட்டியிருக்கும் அழுக்கைக் கழுவலாம். ஆனால் தண்ணீரைக் கொண்டு உனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பைக் கழுவி (உதறி) விட முடியாது. தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து, அதன் மூலம் நான் பெற்ற நிர்வாகத் திறனை, கிறிஸ்தவ நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உபயோகிக்க வேண்டும் என்பது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு பொறுப்பு. அதேபோல நான் படித்ததையும் தெரிந்து கொண்டதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது எனக்குக் கொடுக்கப்படுள்ள இன்னொரு பொறுப்பு. உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன? சுவிசேஷம் பிரசங்கிப்பவர்களைத் தாங்குவது ஒரு சிலருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. இளைஞர்களைக் கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்துவது வேறு சிலருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. தண்ணீரை எடுத்து கையைக் கழுவுவதைப் போல உன் பொறுப்பை (கழுவி) உதறிவிட முடியாது.
ஜெபம்:
ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பை நேர்மையுடனும் திறமையுடனும் நிறைவேற்ற எனக்கு உதவிசெய்யும். ஆமென்.