மத் 27: 27 – 34
அவரைப் பரியாசம்பண்ணி
அவர் 12 சீடர்களைத் தெரிந்தெடுத்து, மூன்று வருடகாலம் அவர்களோடு வாழ்ந்து, அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். பயிற்சி பெற்ற சீடர்கள் அவர் துன்பப்படும் போது அவரைத் தனிமையாய் விட்டு விட்டு ஓடிவிட்டார்கள். யாரை இரட்சிக்க வந்தாரோ அந்த மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் சிலுவையில் அறையும்படி அவரை ஒப்புக் கொடுத்தார்கள். அவரைச் சிலுவையில் அறைந்த போர்ச் சேவகரோ, அவருக்கு பலவிதமான சரீர கஷ்டங்களைக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரைப் பரிகாசமும் பண்ணினார்கள். இயேசு சகலவிதமான வேதனைகளையும் சகித்தார். மனிதன் அனுபவிக்கக்கூடிய எல்லாவிதமான துன்பங்களும் அவருக்குத் தெரியும். உன் துன்பம் எதுவாயிருந்தாலும் சரி – எந்த வியாதியாக இருந்தாலும், மன வேதனையாக இருந்தாலும் – உனக்காக மனஸ்தாபப்பட்டு உனக்கு உதவி செய்யக்கூடியவர் இயேசு ஒருவரே.
ஜெபம்:
ஆண்டவரே, என் துன்பங்களை கண்ணோக்கும். அருகில் இருந்து எனக்கு உதவி செய்யும். ஆமென்.