காலைத் தியானம் – மார்ச் 26, 2022

மத் 27: 35 – 44

அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இரட்சிக்கட்டும்

                             செழிப்பு தேவனுடைய பிரியத்தையும், துன்பம் தேவனுடைய பிரியமின்மையையும் காட்டுகிறது என்று யூதர்கள் நினைத்தார்கள். நாமும் அடிக்கடி அப்படித்தான் நினைக்கிறோம். அது தவறு.  தேவனுக்குப் பிரியமானவர்களுக்கும் துன்பம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் தாம் நேசிக்கும் பிள்ளைகளை நேர்வழிப் படுத்துவதற்காக அல்லது தாழ்மையைக் கற்றுக் கொடுப்பதற்காக தேவன் துன்பத்தை அனுப்புவது உண்டு. மனித வீழ்ச்சியால் இவ்வுலகம் பொல்லாததாக இருக்கிற படியால், நாம் சில நேரங்களில் அநாவசியமாக அல்லது குறிப்பிட்ட காரணமில்லாமல், துன்பங்களை அனுபவிக்கிறதும் உண்டு. அது எப்படியிருந்தாலும் துன்பம் நேரிடும்போது தேவன் உன் அருகில் இருக்கிறார் என்பதை மறந்துவிடவேண்டாம்.  வியாதியாய் இருக்கும் பிள்ளையை விட்டுவிட்டு தாய் தூரமாய் போய் விட மாட்டாள் அல்லவா?

ஜெபம்:

ஆண்டவரே, நான் துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில் என் அருகிலிருந்து என்னை ஆற்றித் தேற்றுவதற்காக நன்றி சுவாமி. ஆமென்.