மத் 27: 45 – 53
பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று
இயேசு கிறிஸ்து இல்லாத இடத்தில் அந்தகாரம் இருக்கும். பாவம் அந்தகாரத்தை உண்டாக்கும். பாவம் கண்களைக் குருடாக்கி விடும். இயேசு ஒளியாக இருக்கிறார். அவரில் கொஞ்சம்கூட இருள் இல்லை. ஆயினும் உலக மக்களின் பாவம் உலகத்தைக் குருடாக்கி விட்டது. வெளிச்சத்தை முற்றிலும் மூடி விடக்கூடிய அளவுக்கு உலகத்தின் பாவம் இருக்கிறது. அதே சமயம் அநேகப் பாவங்கள் இருக்குமிடத்தில் தான் அந்தகாரம் இருக்கும் என்று அர்த்தமில்லை. ஒரு சின்ன மரக்காலால் அறை முழுவதும் வெளிச்சம் கொடுக்கக்கூடிய விளக்கை மறைத்து விடலாம். சின்ன பாவம் தானே என்று அசட்டையாக இருந்து விடாதே. சின்ன பாவம் கூட வெளிச்சத்தை மறைத்துவிடும்.
ஜெபம்:
ஆண்டவரே, ’சின்ன பாவம் தானே’ என்ற சாத்தானுடைய ஏமாற்றுதலிலிருந்து என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.